ஹைட்ரஜன் மூலம் இயங்கும் காரில் பயணம் செய்த நிதின் கட்காரி...!

டெல்லியில் தண்னீரிலுள்ள ஹைட்ரஜனை பிரித்தெடுத்து எரிபொருளாக பயன்படுத்தப்படும் காரில் நிதின் கட்கரி பயணம் மேற்கொண்டார்.

Update: 2022-03-30 05:47 GMT

புதுடெல்லி,

பூமியிலிருந்து கிடைக்கும் பெட்ரோல், டீசல், எண்ணெய்களின் வளம் ஒருபுறம் குறைந்து கொண்டிருக்கிறது. அதே நேரம் அவற்றின் பயன்பாடும், விலையும் கூடிக்கொண்டே இருக்கிறது.

இந்த நிலை நீடிக்கும்போது, ஒருநாள் பூமியின் எண்ணெய் வளம் இல்லாமல் போய்விடும் நிலைமை உருவாகலாம். அத்தகைய நிலை வந்தால், நடைப்பயணமோ, சைக்கிள் பயணமோ, மாட்டுவண்டி பயணமோ மறுபடியும் ஏற்படக்கூடிய சூழ்நிலை வரும். இதை தவிர்க்க மாற்று எரிபொருள் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இப்போது உருவாகியுள்ளது. அப்படிப்பட்ட மாற்று எரிபொருளாக ஹைட்ரஜன் வாயு திகழ்கிறது.

ஹைட்ரஜன் வாயுவை எரிபொருளாகப் பயன்படுத்தி ஓடக்கூடிய கார்களின் உற்பத்தியும் இப்போது தொடங்கிவிட்டது.

இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதுமே சுற்றுசூழல் பாதிப்பை குறைக்க மற்றும் தடுக்க மாற்று எரிபொருளைப் பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்தியாவில், ஹைட்ரஜனை மாற்று எரிபொருளாக பயன்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில்,  மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி  நிதின் கட்கரி, மிராய் எனப்படும் ஹைட்ரஜன் காரில் நாடாளுமன்றத்துக்கு சென்றார். 

டெல்லியில் தண்னீரிலுள்ள ஹைட்ரஜனை பிரித்தெடுத்து எரிபொருளாக பயன்படுத்தப்படும் காரில் நிதின் கட்கரி பயணம் மேற்கொண்டார். 

இது குறித்து அவர் கூறியதாவது:- 

3 ஆயிரம் கோடி மதிப்பிலான பசுமை ஹைட்ரஜன்  திட்டத்தால் நிலக்கரி பயன்பாடு குறையும்.  இந்தியாவில் விரைவில் ஹைட்ரஜன் எரிபொருள் உற்பத்தி தொடங்கப்பட்டு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்றார்.

மேலும் செய்திகள்