சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து பலாத்காரம், கொலை வழக்கு கைதிகள் 7 பேர் தப்பியோட்டம்

மத்திய பிரதேசத்தில் பாலியல் பலாத்காரம், கொலை உள்ளிட்ட வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகள் 7 பேர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து தப்பியோடி உள்ளனர்.

Update: 2022-03-28 12:07 GMT


இந்தூர்,



மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் சிறுவர் சீர்திருத்த பள்ளி ஒன்று உள்ளது.  இதில், பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்ற சிறுவர்கள் உள்பட 18 வயது பூர்த்தியடையாத பலர் கைதிகளாக உள்ளனர்.

இந்த நிலையில், இந்த கைதிகளில் 7 பேர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து நேற்றிரவு தப்பியோடி உள்ளனர்.  இதுபற்றி போலீஸ் சூப்பிரெண்டு ஆர்.கே. திரிவேதி கூறும்போது, தப்பியோடிய சிறுவர்கள், செல்வதற்கு முன் காவலரை அடித்து, உதைத்து அவரிடம் இருந்த சிறை அறையின் சாவியை பறித்து கொண்டனர்.

அவரது மொபைல் போனையும் அவரிடம் இருந்து பறித்து சென்றுள்ளனர்.  அவர்கள், பாலியல் பலாத்காரம், கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட கொடூர வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகள் ஆவர்.  சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து தப்பியோடி உள்ள 7 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.  தொடர்ந்து விசாரணையும் நடந்து வருகிறது என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்