மேற்கு வங்கத்தில் பேருந்து விபத்து: ஒருவர் பலி, பலர் படுகாயம்

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.

Update: 2022-03-27 18:37 GMT
கோப்புப் படம்
கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் பலர் காயமடைந்தனர். முன்னதாக, அரம்பாக்கில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து லிலுவா காவல் நிலையத்திற்கு உட்பட்ட சாம்ரைல் நகருக்கு அருகில் வந்த போது விபத்துக்குள்ளானது.

இதையடுத்து விபத்தில் காயமடைந்த 13 பேர் மீட்கப்பட்டு ஹவுரா மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறு காயங்களுடன் உயிர்தப்பிய பேருந்து பயணிகள் முதலுதவிக்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர். 

தகவலறிந்த போலீசார் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு வந்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்