உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவ மையமாக இந்தியா திகழ்கிறது: பிரதமர் மோடி
உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவ மையமாக இந்தியா திகழ்ந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் உள்ள பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையத்தை, குஜராத்தில் உள்ள ஆயுர்வேத பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், அதன் இடைக்கால அலுவலகத்துடன் நிறுவுவதற்கான உலக சுகாதார நிறுவனத்துடன் ஆயுஷ் அமைச்சகம் அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவ மையமாக இந்தியா திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “அதிநவீன வசதிகளைக் கொண்ட நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. உலக சுகாதார அமைப்பு பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையம். இந்த மையம் ஒரு ஆரோக்கியமான கிரகத்தை உருவாக்குவதற்கும், உலகளாவிய நன்மைக்காக நமது பாரம்பரிய நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும்.” என்று அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
India is honoured to be home to a state-of-the-art @WHO Global Centre for Traditional Medicine. This Centre will contribute towards making a healthier planet and leveraging our rich traditional practices for global good. https://t.co/w59eeIKR5g
— Narendra Modi (@narendramodi) March 26, 2022