காஷ்மீரில் போலீசார் சோதனை ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல்

காஷ்மீரில் போலீசாரின் சோதனையில் ஆயுதங்கள் மற்றும் பதுங்கு குழி ஒன்றும் கண்டறியப்பட்டு உள்ளது.

Update: 2022-03-25 17:33 GMT

ஜம்மு,



ஜம்மு மற்றும் காஷ்மீரின் மார்வா பகுதியில் உள்ள தில்லார் வன பகுதியில் கிஷ்த்வார் நகர போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  அந்த பகுதியை சுற்றி வளைத்து சோதனையிட்டதில், பதுங்கு குழி ஒன்றை கண்டறிந்தனர்.

இதுதவிர, சீன எறிகுண்டு ஒன்று உள்பட ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் 3 எறிகுண்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.  இதுபற்றி எப்.ஐ.ஆர். ஒன்றும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.  தொடர்ந்து விசாரணையும் நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்