எரிபொருள் விலையேற்றத்துக்கு என்ன காரணம்? மத்திய மந்திரி விளக்கம்

சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை உயர்வே நாட்டில் எரிபொருள் விலையேற்றத்துக்கு காரணம் என மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.

Update: 2022-03-24 12:19 GMT
புதுடெல்லி,

நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் இல்லதரசிகள் வேதனை அடைந்துள்ளனர். 

இந்தநிலையில்,  நாடளுமன்ற மக்களவையில் இதுகுறித்த கேள்விக்குப் பதிலளித்த மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி,

நாட்டில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்வுக்குக் காரணம் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை உயர்வே ஆகும். எனினும் மக்களுக்கு குறைந்த விலையில் எரிபொருள் கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

ஏப்ரல் 2021 முதல் பிப்ரவரி 2022 வரையிலான காலகட்டத்தை ஒப்பிடும்போது சர்வதேச சந்தையில் எல்.என்.ஜி.யின் விலை 37%-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. 

இருப்பினும் இந்தியாவில் 5% மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்றைய சர்வதேச நிலைமை என்ன என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

சவுதி விலைப்படி, எல்.பி.ஜி. கேஸ் சிலிண்டரின் விலை ஏப். 2020 - மார்ச் 2022 காலகட்டத்தில் 285% அதிகரித்துள்ளது. ஆனால் இங்கு கடந்த 6 மாதங்களில் 37% மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு மிகவும் குறைந்த விலையில் எரிபொருள் கிடைக்கச்செய்ய வேண்டும் என்பதே அரசின் முயற்சியாக இருக்கிறது' என்றார்.

மத்திய மந்திரியின் பதிலைக் கேட்டதும், காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், 'ஆனால், எரிபொருள்களுக்கான வரிகள் ஏதும் குறைக்கப்படவில்லை' என சுட்டிக்காட்டினார்.

மேலும் செய்திகள்