தி காஷ்மீர் பைல்ஸ் பட விவகாரம்: மத்திய அரசு மீது மெகபூபா முப்தி விமர்சனம்

காஷ்மீரி பண்டிட்களின் வலியை ஆயுதமாக்குவதும் அவர்களின் தவறான நோக்கத்தை வெளிப்படுத்துகிறது என மத்திய அரசு மீது மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார்.

Update: 2022-03-23 16:15 GMT
ஸ்ரீநகர், 

ஜம்மு - காஷ்மீரில் 1990-களில் இந்து பண்டிட்டுகள் பயங்கரவாதிகளால்  கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் உயிருக்கு பயந்து ஆயிரக்கணக்கான பண்டிட்டுகள் காஷ்மீரை விட்டு வெளியேறினர். 

இந்தக் கதைக்களத்தை மையமாக வைத்து காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படத்தை விவேக் அக்னிஹோத்ரி இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் அண்மையில் திரையிடப்பட்டு கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன.

இந்த நிலையில்,  தி காஷ்மீர் பைல்ஸ் படம் குறித்து  ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி கூறியதாவது:-

ஜம்மு காஷ்மீரில், அனைவரும் கொடுமைகளை எதிர்கொண்டனர். பாஜகவும், பிரதமர் மோடியும் தி காஷ்மீர் பைல்ஸ் படத்தை எப்படி விளம்பரப்படுத்துகிறார்களோ, அதே போல, கடந்த 8 ஆண்டுகளில் காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு ஏதாவது செய்திருந்தால் இன்று அவர்களின் நிலை வேறுவிதமாக இருந்திருக்கும். இந்திய அரசு காஷ்மீர் பைல்ஸ் படத்தை ஆக்ரோஷமாக ஊக்குவிக்கும் விதமும் காஷ்மீரி பண்டிட்களின் வலியை ஆயுதமாக்குவதும் அவர்களின் தவறான நோக்கத்தை வெளிப்படுத்துகிறது” என்றார்.

மேலும் செய்திகள்