இந்தியாவின் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி!

ஒன்பது மீட்டர் நீளமுள்ள ஏவுகணை ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் பயணிக்கக்கூடியது.

Update: 2022-03-23 14:29 GMT
புதுடெல்லி,

ஒரு நிலபரப்பிலிருந்து இன்னொரு நிலபரப்புக்கு சென்று தாக்கும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை இந்திய பாதுகாப்புத்துறை  இன்று  அந்தமான் நிக்கோபாரில் வெற்றிகரமாக பரிசோதித்தது.

இந்த மேம்படுத்தப்பட்ட நீட்டிக்கப்பட்ட ஏவுகணை துல்லியமாக அதன் இலக்கை தாக்கியது என்று பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி பெற்றதற்கு விமானப்படை முதன்மை தளபதி விஆர் சவுதாரி வாழ்த்து தெரிவித்தார். அவர் ஏவுகணை செயல்பாட்டுக்கான தயார்நிலையை ஆய்வு செய்வதற்காக அந்தமான்  நிக்கோபார் பகுதியில் இருக்கிறார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஏவுகணை ஒலியை விட அதிக வேகம் கொண்டது. ஒன்பது மீட்டர் நீளமுள்ள இந்த ஏவுகணை ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் பயணிக்கக்கூடியது மற்றும் 300 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் வாய்ந்தது.

மேலும் செய்திகள்