உடல் நிலை மேலும் பாதிப்பு:லாலு பிரசாத் யாதவ் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்
லாலு பிரசாத் யாதவ் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.
புதுடெல்லி,
பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ். கால்நடைத்தீவன ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அவர், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், உடல் நிலை காரணமாக, ராஞ்சியில் உள்ள ராஜேந்திர இன்ஸ்டியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் , அவரது உடல் நிலை மோசம் அடைந்துள்ளது. இதையடுத்து, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.
ஊழல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால், கடந்த 2017- ஆம் ஆண்டு முதல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் யாதவ், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான தண்டனை காலத்தை ரிம்ஸ் மருத்துவமனையில்தான் கழித்து வருகிறார்.