பஞ்சாயத்து தலைவர் கொலை: வன்முறையில் 10 பேர் உயிரோடு எரித்துக் கொலை
பஞ்சாயத்து தலைவர் கொலை தொடர்பான வன்முறையில் 10 பேர் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டனர்.
கொல்கத்தா
மேற்கு வங்காள மாநிலம் பிர்பம் மாவட்டம் ராம்பூர்ஹத்தில் உள்ள பர்ஷல் கிராமத்தின் துணைத் தலைவராக இருந்தவர் பாது ஷேய்க். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் ஷேய்க் மீது வெடிகுண்டு வீசி பயங்கரதாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த பாது ஷேய்க் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடல் சொந்த ஊரான போக்டுய் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இவரது கொலை காரணமாக அந்த கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. ஒரு கும்பல் வன்முறையில் ஈடுபட்டது. போக்டுய் கிராமத்தில் உள்ள வீடுகளை சூறையாடிய நிலையில், ஆத்திரமடைந்த கும்பல் பல வீடுகளுக்கு தீ வைத்தது, அதில் சுமார் 10 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர்.
ஒரே வீட்டில் இருந்து 7 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.