“நீட் தேர்வு எழுதும் கிராமப்புற மாணவர்களின் விவரம் இல்லை” - தேசிய தேர்வு முகமை

நீட் தேர்வு எழுதும் கிராமப்புற மாணவர்களின் எந்த விவரங்களும் தங்களிடம் கிடையாது என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

Update: 2022-03-22 07:06 GMT
புதுடெல்லி,

மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக மாணவர்களுக்கு தேசிய அளவில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நீட் தேர்வால் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் மற்றும் ஏழை எளிய மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும், நீட் தேர்வை ரத்து செய்யவும் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 

இந்நிலையில் கிராமப்புற மாணவர்கள் எத்தனை பேர் நீட் தேர்வை எழுதுகிறார்கள்? அதில் எத்தனை பேர் தேர்ச்சி பெறுகிறார்கள்? என்ற விவரங்கள் குறித்து தேசிய தேர்வு முகமையிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கிழ் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டன. 

இதற்கு தேசிய தேர்வு முகமை அளித்துள்ள பதிலில், நீட் தேர்வு எழுதும் கிராமப்புற மாணவர்களின் எந்த விவரங்களும் தங்களிடம் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நீட் தேர்வால் கிராம்ப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டு வரும் நிலையில், தேசிய தேர்வு முகமையின் இந்த பதில் கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்