‘ஒரே நாடு ஒரே மின்கட்டணம்’ கொள்கையை அமல்படுத்துங்கள் பா.ஜனதா எம்.பி. கோரிக்கை
ஒரே நாடு ஒரே வரி’ என்ற அடிப்படையில் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தி வருகிறோம்.
புதுடெல்லி,
மாநிலங்களவையில் நேற்று பா.ஜனதா எம்.பி. சுஷில் குமார் மோடி பேசியதாவது:-
‘ஒரே நாடு ஒரே வரி’ என்ற அடிப்படையில் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தி வருகிறோம். அதுபோல், நாடு முழுவதும் ஒரே மின்கட்டணம் இருப்பதை உறுதி செய்ய ‘ஒரே நாடு ஒரே மின்கட்டணம்’ கொள்கையை அமல்படுத்துமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
உதாரணமாக, பீகாரில் மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி உள்ளிட்ட பொருட்கள் குறைவாக கிடைப்பதால், மத்திய மின்உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்க வேண்டி இருக்கிறது. இதனால், பொதுமக்களும் அதிக கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது.
இதை தவிர்க்க ‘ஒரே நாடு ஒரே மின்கட்டணம்’ அமலுக்கு வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.