கர்நாடக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது

2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு கர்நாடக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது.

Update: 2022-03-20 21:01 GMT
பெங்களூரு,

கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 4-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளில் 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தாக்கல் செய்தார். 

அதன் மீது விவாதம் நடைபெற்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து துறைகள் வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியுள்ளது. 

இந்த நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் சபை 21-ந் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று(திங்கட்கிழமை) மீண்டும் பெங்களூரு விதான சவுதாவில் கூடுகிறது. சட்டசபை கூடுவதையொட்டி விதான சவுதாவை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

கர்நாடக காங்கிரஸ் கட்சி, நேற்று முன்தினம் துமகூருவில் தனியார் பஸ் விபத்துக்கு உள்ளான சம்பவம் குறித்து பிரச்சினை கிளப்ப வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்