மராட்டியத்தில் இன்று 113- பேருக்கு கொரோனா - ஒருவர் உயிரிழப்பு
தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1,354- ஆக குறைந்துள்ளது
மும்பை,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக சரிந்து வருகிறது. அந்த வகையில், மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 113- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து 283 பேர் இன்று குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
மராட்டியத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 78 லட்சத்து 72 ஆயிரத்து 413- ஆக உள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 43 ஆயிரத்து 767- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1,354- ஆக குறைந்துள்ளது. கொரோனா தொற்றைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 43,200 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.