கர்நாடகத்தில் 16 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை..!
கர்நாடகத்தில் 16 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை.
பெங்களூரு,
கர்நாடகத்தில் 27 ஆயிரத்து 838 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 14 மாவட்டங்களில் 109 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. 16 மாவட்டங்களில் புதிய பாதிப்பு இல்லை.
அதிகபட்சமாக பெங்களூருவில் 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கர்நாடகாவில் 39 லட்சத்து 44 ஆயிரத்து 714 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெங்களூரு மற்றும் ஹாசனில் தலா ஒருவர் என 2 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இதன்மூலம் இதுவரை கொரோனவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆயிரத்து 37 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று 143 பேர் குணம் அடைந்தனர். இதுவரை 39 லட்சத்து 2 ஆயிரத்து 640 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மேலும் 1,995 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.