3 ஆண்டு கழித்து தந்தையுடன் இணைந்த மகள்... உணர்ச்சிகர வீடியோ வெளியீடு

வெளிநாட்டில் பணி செய்து விட்டு 3 ஆண்டுகளுக்கு பின் வந்த மகளை கண்ணீருடன் தந்தை வரவேற்ற உணர்ச்சிகர வீடியோ வைரலாகி வருகிறது.

Update: 2022-03-20 05:05 GMT




புதுடெல்லி,



பெரிய வேலை, நல்ல வருவாய் ஆகியவற்றுக்காக வெளிநாடு செல்வது என்பது பரவலாக எல்லா நாடுகளிலும் அதிகரித்து உள்ளது.  இந்த நிலையில், மகள் ஒருவர் வேலை தேடி வெளிநாடு சென்று பணிபுரிந்து விட்டு 3 ஆண்டுகள் கழித்து நாடு திரும்புகிறார்.

வாகனம் பழுது நீக்கும் கடையில் பணியாற்றி வரும் அவரது தந்தையின் கரங்கள் வேலை செய்ததில் அழுக்கடைந்து காணப்படுகின்றன.  சோர்வாக ஓர் ஓரத்தில் அமர்ந்து இருக்கிறார்.  இந்த நிலையில், அவரது மகள் மெல்ல நடந்து சென்று, தந்தையின் அருகில் சென்றதும் உற்சாகமுடன் கூச்சலிடுகிறார்.  அவரை கண்ட தந்தையும் அழுது கொண்டே ஓடி வருகிறார்.

அவரது கைகளில் கறைகள் இருந்த நிலையில், மகளையும் அழுக்காக்க வேண்டாம் என்பதற்காக கட்டி பிடிக்க கூட முடியாமல் திணறுகிறார்.  இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

இந்த அழகான வீடியோவை பார்த்து அழுது விட்டேன் என ஒருவர் கூறுகிறார்.  மகள் அழுக்காக கூடாது என தந்தை நினைக்கிறார்.  ஆனால், அதனை பற்றி எல்லாம் மகள் கவலைப்பட கூடாது என்று நான் உணர்கிறேன் என மற்றொருவர் கூறியுள்ளார்.  இந்த வீடியோவுக்கு லைக்குகளும் கூடி வருகின்றன.



மேலும் செய்திகள்