குளிர் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் இயல்பை விட அதிகரிக்கும் வெப்பநிலை
ஸ்ரீநகரில் வழக்கமாக 14 டிகிரிக்கு மாறாக 26 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர்,
குளிர் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில் வெப்பநிலையானது இயல்பை இட அதிகரித்து காணப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில், காஷ்மீரில் வெப்பநிலை இயல்பை விட பல டிகிரி அதிகரித்துள்ளது. சமவெளி பகுதியில் இது இயல்பை விட இரு மடங்கு அதிகம்.
ஸ்ரீநகரில் வழக்கமாக 14 டிகிரிக்கு மாறாக 26 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குப்வாரா பள்ளத்தாக்கில் 28.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
இந்த சீசனில் இது இயல்பை விட இரண்டு மடங்கு அதிகம். வசந்தகாலத்தில் கிடைக்கப்பெறும் மழையானது இம்முறை தவறிய காரணத்தினாலும், வறண்ட வானிலையின் காரணமாகவும் வெப்பம் அதிகரித்திருப்பதாக வானிலை ஆய்வாளர் கூறினார்.