காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு

ஜி 23 என்ற அழைக்கப்படும் அதிருப்தி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் குலாம் நபி ஆசாத் வீட்டில் நடைபெற்றது.

Update: 2022-03-18 12:52 GMT
Photo Credit: PTI
புதுடெல்லி,

ஐந்து மாநில தேர்தல் தோல்விக்குப் பிறகு காங்கிரச் அதிருப்தி தலைவர்கள் அடுத்தடுத்து நேற்று ஆலோசனை நடத்தினர். ஜி 23 என்ற அழைக்கப்படும் அதிருப்தி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம்  குலாம் நபி ஆசாத் வீட்டில் நடைபெற்றது. 

3 முறை இந்தக் கூட்டம் நடைபெற்ற நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை குலாம் நபி ஆசாத் இன்று சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது தற்போதைய அரசியல் சூழல்,  உள்கட்சி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடைபெற்று இருக்கலாம் என்று தெரிகிறது. 

மேலும் செய்திகள்