ஊழலுக்கு எதிரான புகார்களை தெரிவிக்க உதவி எண் - பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் அறிவிப்பு..!

ஊழலுக்கு எதிரான புகார்களை தெரிவிக்க உதவி எண் வருகிற 23-ந்தேதி அறிவிக்கப்படும் என்று பஞ்சாப் முதல் மந்திரி கூறியுள்ளார்.

Update: 2022-03-17 11:31 GMT
கோப்புப் படம் ANI
சண்டிகர்,

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. பஞ்சாபின் புதிய முதல் மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் பகவந்த் மான் பகத் சிங் பிறந்த ஊரான கத்கர் கலன் கிராமத்தில் நேற்று பதவியேற்றார். 

இந்த நிலையில் முதல் மந்திரியாக பதவியேற்ற பிறகு பகவந்த் மான் ஊழலுக்க எதிரான புகார்களை தெரிவிக்க உதவி எண் (Helpline) தொடங்க இருப்பதாக அறவித்துள்ளார். மேலும் அந்த உதவி எண் வருகிற 23-ந்தேதி பகத்சிங்கின் தியாக தினத்தில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து பகவந்த் மான் கூறியதாவது:-

'99 சதவீத மக்கள் நேர்மையானவர்கள். மீதமிருக்கிற 1 சதவீத மக்களால் நாட்டின் அமைப்பு உடைகிறது. எனவே பகத் சிங்கின் தியாக தினத்தன்று, ஊழலுக்கு எதிரான உதவி எண் தொடங்கப்படும். அது என்னுடைய தனிப்பட்ட வாட்ஸ்அப் எண்ணாக இருக்கும். 

உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால், அதுகுறித்த வீடியோ அல்லது ஆடியோ பதிவுகளை எனக்கு அனுப்புங்கள். ஊழல் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பஞ்சாப்பில் இனி ஊழல் வேலைக்கு ஆகாது' என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்