ஒட்டுமொத்த உலகின் பார்வையும் இந்தியா மீதுதான் உள்ளது- பிரதமர் நரேந்திர மோடி

இந்தியா துரிதமாக தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-17 07:42 GMT
Image Courtesy : ANI
முசோரி,

முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி நேஷனல் அகாடமி சார்பாக இன்று நடைபெற்ற 96-வது பொது அறக்கட்டளை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டார்.

அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

21ஆம் நூற்றாண்டில் ஒட்டுமொத்த உலகின் பார்வையும் இந்தியா மீதுதான் உள்ளது. இந்தியா துரிதமாக தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவின்போதும், கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதனை புரிந்து கொண்டு புதிய முயற்சியில் ஈடுபட வேண்டும். அவற்றின் காரணங்களை புரிந்து கொள்ளுங்கள். 

ஒருபோதும் அவசரமாக முடிவு எடுக்காதீர்கள். சவாலான செயல்களை செய்வதில் ஆர்வம் கொள்ளுங்கள். வரிசையில் நிற்கும் கடைசி மனிதனை மனதில் வைத்து முடிவுகளை எடுங்கள். கோப்புகள் மற்றும் நிகழ்வுகள் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொண்டு நீங்கள் வேலை செய்ய வேண்டும். 

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

மேலும் செய்திகள்