எல்.ஐ.சி. பங்கு விற்பனைக்கு எதிராக தீர்மானம்:கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது
பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் 5 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது
திருவனந்தபுரம்,
பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் 5 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு எதிராக கேரள சட்டசபையில் நேற்று அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தனியாரின் சுரண்டலில் இருந்து பங்குதாரர்களை பாதுகாப்பதற்காக எல்.ஐ.சி. தேசியமயமாக்கப்பட்டது. நாட்டின் வளர்ச்சியில் அது முக்கிய பங்காற்றியது. சமூகத்தின் நலனுக்காக இதுவரை ரூ.36 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளது.
இத்தகைய எல்.ஐ.சி.யை தனியார் கையில் ஒப்படைப்பது நாட்டுக்கு நல்லதல்ல. தனது செயலை நியாயப்படுத்துவதற்காக, 5 சதவீத பங்குகளை மட்டுமே விற்பதாகவும், இது தனியார்மயம் அல்ல என்றும் மத்திய அரசு கூறுகிறது.
ஆனால், இது தனியார்மயத்தின் முதல் படி. இந்த முடிவை கைவிட்டு, எல்.ஐ.சி.யை தக்க வைத்துக்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பின்னர், தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது