கேரளாவில் பெண்களை மது பரிமாற அனுமதித்த ஓட்டல் மீது வழக்கு மேலாளர் கைது

கேரளாவில் பெண்களை மது பரிமாற அனுமதித்த ஓட்டல் மீது வழக்கு மேலாளர் கைது

Update: 2022-03-16 00:08 GMT
கொச்சி, 

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு ஓட்டலில், ‘கேரளாவின் முதல் பப் (மதுக்கூடம்)’ என்ற ஆர்ப்பாட்டமான அறிவிப்புடன் சமீபத்தில் ஒரு மதுக்கூடம் திறக்கப்பட்டது.

அதன் தொடக்க நாள் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் உலா வந்தது. அதில், பெண்கள் மது ஊற்றிக்கொடுப்பது போலவும், பரிமாறுவது போலவும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

அதையடுத்து வட்டார கலால் வரி அலுவலகம் சார்பில் அந்த ஓட்டலில் ஆய்வு நடத்தப்பட்டது.

அப்போது, பெண்களை மது பரிமாற அனுமதிப்பது, இருப்பு பதிவேட்டை முறையாக பராமரிக்காதது உள்பட பல்வேறு விதிமீறல்களில் அந்த ஓட்டல் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. கேரள வெளிநாட்டு மது சட்டப்படி, மதுக்கூடங்களில் பெண்களை பணியமர்த்தக்கூடாது.

இதையடுத்து, குறிப்பிட்ட ஓட்டல் நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்த கலால் வரித்துறை, அந்த ஓட்டல் மேலாளரை கைது செய்தது.

ஓட்டல் மீதான வழக்கு விவரங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும். ஓட்டல் மதுக்கூடம் தொடர்பாக கலால் வரித்துறை கமிஷனர் நடவடிக்கை எடுப்பார் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்