பிறந்தநாளன்று பிரதமர் மோடியை சந்தித்த அதிமுக எம்.பி.

அதிமுக எம்.பி. தம்பிதுரை, நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பிரதமர் மோடியை சந்தித்தார்.

Update: 2022-03-15 16:31 GMT
புதுடெல்லி,

பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷாவை அதிமுக எம்.பி. தம்பிதுரை இன்று சந்தித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. அப்போது அவர் பிரதமர் மோடிக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். 

இருவரையும் சந்தித்த தம்பிதுரை எம்.பி., 4 மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது குறித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அத்துடன் அதிமுக எம்.பி. தம்பிதுரைக்கு இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்