நாடாளுமன்றத்தில் ஜம்மு காஷ்மீருக்கான பட்ஜெட் தாக்கல்
பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வின் முதல் நாளான இன்று ஜம்மு காஷ்மீருக்கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி இன்று தொடங்கியது. கொரோனா 3-வது அலை காரணமாக முதல் பகுதியில் மக்களவையும், மாநிலங்களவையும் தனித்தனி நேரத்தில் நடந்தது.ஆனால், இப்போது கொரோனா பரவல் தணிந்து விட்டதால், இரு அவைகளும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகின்றன.
பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வின் முதல் நாளான இன்று ஜம்மு காஷ்மீருக்கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இன்று மாலையே அந்த பட்ஜெட் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தற்போது சட்டப்பேரவை இல்லாததால், அந்த யூனியன் பிரதேசத்திற்கான நிதி நிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து ஒப்புதல் பெறுவது அவசியம் ஆகும்.