உக்ரைன் விவகாரம்: மக்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் நாளை அறிக்கை தாக்கல்

உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்பதில் மத்திய அரசு தாமதம் செய்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.

Update: 2022-03-14 05:21 GMT
புதுடெல்லி,

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. கொரோனா 3-வது அலை காரணமாக முதல் பகுதியில் மக்களவையும், மாநிலங்களவையும் தனித்தனி நேரத்தில் நடந்தது. ஆனால், இப்போது கொரோனா பரவல் தணிந்து விட்டதால், இரு அவைகளும் ஒரே நேரத்தில் நடக்கின்றன. காலை 11 மணிக்கு இரு அவைகளின் கூட்டமும் தொடங்குகிறது.

5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான 4 நாட்களில் நாடாளுமன்றம் கூடுகிறது. 4 மாநிலங்களில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. ரஷியா-உக்ரைன் போரால் பரபரப்பான சூழல் நிலவுகையில் இந்த தொடர் தொடங்குகிறது. 

உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்பதில் மத்திய அரசு தாமதம் செய்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த நிலையில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாளை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார். 

மேலும் செய்திகள்