உ.பி.யில் 2வது முறையாக ஆட்சி : பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் யோகி ஆதித்யநாத்
பிரதமர் மோடியை சந்திக்கும் அவர், உத்தர பிரதேசத்தில் அமைய உள்ள புதிய அமைச்சரவை குறித்து ஆலோசிக்க உள்ளார்.
லக்னோ,
உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துள்ளது இதனால் மீண்டும் முதல்-மந்திரி பொறுப்பேற்க உள்ள யோகி ஆதித்யநாத் இன்று டெல்லி செல்கிறார். பிரதமர் மோடியை சந்திக்கும் அவர், உத்தர பிரதேசத்தில் அமைய உள்ள புதிய அமைச்சரவை குறித்து ஆலோசிக்க உள்ளார்
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா உள்ளிட்டோரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது . பதவியேற்பு விழா தேதி குறித்தும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது .