தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதி

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் உடல்நல பாதிப்பு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2022-03-11 08:06 GMT
ஐதராபாத்,

தெலுங்கானா முதல்-மந்திரி  சந்திரசேகர் ராவ் உடல்நிலை பாதிப்பு காரணமாக   ஐதராபாத்தில் உள்ள தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

உடல்நிலை பாதிப்பு காரணமாக தெலுங்கானா  முதல்-மந்திரி  சந்திரசேகர ராவ் இன்று சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தன்னுடைய இடது கையில் சற்று பிரச்சினைகள் இருப்பதாக அவர் கூறியதை தொடர்ந்து அவர் ஐதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட அனைத்து விதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிலையில் அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன, கட்சியினர் மற்றும் மாநில மக்கள் ஆகியோர் கவலைப்பட வேண்டாம் என அவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்