கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியப் பொருளாதாரத்தை பாதிக்கும் -கிறிஸ்டலினா ஜார்ஜிவா
இந்தியாவில் நிதி நிர்வாகம் சிறப்பாக உள்ளதாக சர்வதேச நாணய நிதிய மேலாண் இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி
ரஷியா மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. சமீபத்தில் ரஷியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா அதிரடியாக தடைவிதித்தது. மேலும் பல்வேறு நிறுவனங்களும் ரஷியாவில் தங்களது சேவைகளை நிறுத்தி உள்ளது.
உக்ரைன் போர்ச் சூழலில் உலக அளவிலான பொருளாதாரத்தின் தாக்கம் குறித்துப் சர்வதேச நாணய நிதியத்தின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் பேசிய நிதியத்தின் துணை மேலாண் இயக்குநர் கீதா கோபிநாத், இந்தியா எரியாற்றல் தேவைக்குப் பெரிதும் இறக்குமதியைச் சார்ந்துள்ளதாகவும், உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவாகியுள்ளதாக கிறிஸ்டலினா ஜார்ஜிவா தெரிவித்தார்.