உத்தரகாண்ட் தேர்தல் முடிவுகள்; முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி தோல்வி!

அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் புவன் சந்திர காப்ரியிடம் புஷ்கர் சிங் தாமி 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தாமி தோல்வி அடைந்தார்.

Update: 2022-03-10 10:38 GMT
டேராடூன்,

உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை பொறுத்தவரையில், பாஜக 4 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கும் என்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 42 தொகுதிகளில் பாஜகவும், 24 தொகுதிகளில் காங்கிரசும், மற்ற கட்சிகள் 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரும்பான்மை பெற 36 இடங்களை வெல்ல வேண்டும். இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை காணுகையில், 41 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. இதன்மூலம், அங்கு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.

இந்நிலையில்,காதிமா தொகுதியில்  போட்டியிட்ட அம்மாநில முதல்-மந்திரியும் பாஜக வேட்பாளருமான புஷ்கர் சிங் தாமி பின்னடைவை சந்தித்து வந்தார். 

அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் புவன் சந்திர காப்ரியிடம் புஷ்கர் சிங் தாமி  7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தாமி தோல்வி அடைந்தார்.

உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி அடைந்த இந்த படுதோல்வி அவருடைய அரசியல் எதிர்காலத்திற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இம்முறை மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள பாஜக, புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

மேலும் செய்திகள்