சர்வதேச பெண்கள் தினம்: பூரி கடற்கரையில் சிறப்பு மணல் சிற்பம்..!

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பூரி கடற்கரையில் சிறப்பு மணல் சிற்பம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-03-08 00:33 GMT
image courtesy: twitter
பூரி,

சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.பெண்களின் மகத்தான சாதனைகளை கொண்டாடும் வகையில் உலக அளவில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 

இந்த நிலையில் பிரபல மணல் சிற்ப கலைஞரான மனாஸ் குமார் சாஹூ சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பூரி கடற்கரையில் ஒரு மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார். 'சார்புகளை உடை' (Break the bias) என்ற தலைப்பின் கீழ் மனாசும் அவரது குழுவினரும் சேர்ந்து 15 அடி அகலமான மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளனர்.

15 டன் மணலைக் கொண்டு 7 மணி நேரம் வேலை செய்து இந்த சிற்பத்தை வடிவமைத்துள்ளனர். பெண்கள் குறித்து கூறிய மனாஸ், இந்த தலைமுறையில் பெண்கள் பல்வேறு துறையில் தங்களுடைய திறமையை நிரூபித்துள்ளனர். எந்த துறையிலும் பெண்கள் பின்தங்கவில்லை என்று கூறினார்.

மேலும் செய்திகள்