திருமணத்திற்கு மறுத்த மகளை கவுரவ கொலை செய்த தந்தை
திருமணத்திற்கு மறுத்த மகளை, தந்தை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பீகாரில் நடந்துள்ளது
கோபால்கஞ்ச்,
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர் தேவ் ராம். இவருக்கு கலாவதி என்ற மனைவியும், கிரண் குமாரி (19 வயது ) என்ற மகளும் உள்ளனர்.இவர் தனது மகளுக்கு நாடி சர்மா என்பவரை திருமணம் செய்து வைக்க முடிவுசெய்துள்ளார்.
ஆனால் இவரது மகள் கிரண் குமாரி அதே பகுதியை சேர்ந்த வேறொரு நபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அதனால் தனது தந்தையிடம் நாடி சர்மாவை திருமணம் செய்து கொள்ள முடியாது என கிரண் குமாரி தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தேவ் ராம் தனது இரண்டு சகோதரர்கள் உடன் சேர்ந்து தனது மகளை கட்டிவைத்து கழுத்தை அறுத்துள்ளார். இதை தடுக்க முயன்ற தனது மனைவியையும் தேவ் ராம் தாக்கியுள்ளார்.
வலியால் அலறித்துடித்த கிரண் குமாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து போலீசாரிடம் கலாவதி புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய மூவரையும் தேடிவருகின்றனர்.