க.அன்பழகனின் 2-ம் ஆண்டு நினைவு தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
மறைந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் 2-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
சென்னை,
இன்று மறைந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் 2-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில், தூத்துக்குடியில் முதல்--அமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் அவரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழகம் முழுவதிலும் பல இடங்களில் அன்பழகன் படத்திற்கு திமுகவைச் சேர்ந்தவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் டுவிட்டர் பதிவில்
"திராவிடமே தன் உயிரெனக் கொண்டவர்; தமிழன் யாருக்கும் தாழ்ந்தவனில்லை என மேடைதோறும் முழங்கியவர்; தலைவர் கலைஞரின் உற்ற தோழர்; என் பொதுவாழ்வுப் பயணத்தில் அரணாகவும் ஆசானாகவும் விளங்கிய இனமானப் பேராசிரியரின் 2-ஆம் ஆண்டு நினைவுநாளில் அவருக்கு என் புகழ்வணக்கத்தை உரித்தாக்குகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
திராவிடமே தன் உயிரெனக் கொண்டவர்; தமிழன் யாருக்கும் தாழ்ந்தவனில்லை என மேடைதோறும் முழங்கியவர்; தலைவர் கலைஞரின் உற்ற தோழர்; என் பொதுவாழ்வுப் பயணத்தில் அரணாகவும் ஆசானாகவும் விளங்கிய இனமானப் பேராசிரியரின் 2-ஆம் ஆண்டு நினைவுநாளில் அவருக்கு என் புகழ்வணக்கத்தை உரித்தாக்குகிறேன்! pic.twitter.com/zxEpkIwi23
— M.K.Stalin (@mkstalin) March 7, 2022