உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்: இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்...!

உத்தரபிரதேசத்தில் இன்று 7-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Update: 2022-03-07 01:30 GMT
லக்னோ,

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, ஏற்கனவே 6 கட்ட தேர்தல் நடைபெற்றுள்ளது. 

இந்நிலையில், 7-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 58 தொகுதிகளில் இந்த வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்களர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இந்த இறுதிகட்ட தேர்தலில் பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் உள்பட 613 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சுமார் 2.06 கோடி வாக்களர்கள் வாக்களிக்க உள்ளனர்.

உத்தரபிரதேச தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வரும் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. அதேப்போ, உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் தேர்தலில் பதிவான வாக்குகளும் வரும் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்