உக்ரைனில் இருந்து மேலும் 1,200 இந்திய மாணவர்கள் இன்று நாடு திரும்புவார்கள் - ஜெய்சங்கர்

உக்ரைனில் இருந்து மேலும் 1,200 இந்திய மாணவர்கள் இன்று நாடு திரும்புவார்கள் என்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-06 23:58 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

உக்ரைனில் போரில் இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளதால் மத்திய அரசு ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தி உள்ளது. ரஷிய படையெடுப்பின் கீழ் உள்ள உக்ரைன் நாட்டில் பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் சிக்கி உள்ளனர்.

அந்த நாட்டின் வான்பரப்பு மூடப்பட்டு விட்டதால், அங்குள்ள இந்திய மாணவர்களை அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, பெலாரஸ் போன்றவற்றின் வழியாக மீட்பதற்கு மத்திய அரசு ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் மீட்கப்பட்டு விட்டாலும், இன்னும் அங்கு ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். 

இந்நிலையில், 7 விமானங்கள் மூலம் சுமார் 1,200 இந்தியர்கள் இன்று பாதுகாப்பாக தாயகம் திரும்புவார்கள் என்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “ இன்று உக்ரைனிலிருந்து  7 விமானங்கள் மூலம் சுமார் 1,200 இந்தியர்கள் இன்று நாடு திரும்புவார்கள்” என தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்