பூஸ்டர் டோசாக பயன்படுத்த கோவோவேக்ஸ் தடுப்பூசி 3-ம் கட்ட பரிசோதனைக்கு பரிந்துரை..!

அமெரிக்காவின் நோவோவேக்ஸ் நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக ‘நோவோவேக்ஸ்-கோவ் 2373’ என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.

Update: 2022-03-06 20:38 GMT
புதுடெல்லி,

அமெரிக்காவின் நோவோவேக்ஸ் நிறுவனத்தார், கொரோனாவுக்கு எதிராக ‘நோவோவேக்ஸ்-கோவ் 2373’ என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர். இந்த தடுப்பூசியை இந்தியாவில் கோவோவேக்ஸ் என்ற பெயரில் தயாரித்து இங்கும், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலும் வினியோகிக்க புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, உரிமம் வழங்கி உள்ளது. 

இந்த தடுப்பூசியை இந்தியாவில் பெரியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக போடுவதற்கு மூன்றாம் கட்ட பரிசோதனை நடத்துவதற்கு அனுமதி வேண்டி இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் புனே இந்திய சீரம் நிறுவனத்தார் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இந்த விண்ணப்பத்தை மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு நிறுவனத்தின் தொழில்நுட்ப குழுவினர் பரிசீலித்து, கோவோவேக்ஸ் தடுப்பூசியின் மூன்றாவது கட்ட பரிசோதனையை அனுமதிக்கலாம் என்று இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

இதேபோன்று சமீபத்தில் ரஷியாவின் ‘ஸ்புட்னிக் லைட்’ தடுப்பூசியையும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக பயன்படுத்துவதற்கான மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு அனுமதிக்கலாம் என்று மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு நிறுவனத்தின் தொழில்நுட்ப குழுவினர் பரிந்துரை செய்தது நினைவுகூரத்தக்கது.

மேலும் செய்திகள்