உக்ரைன் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன - பிரதமர் மோடி
உக்ரைன் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளன.
லக்னோ,
403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, ஏற்கனவே 6 கட்ட தேர்தல் நடைபெற்றுள்ளது.
7-ம் மற்றும் இறுதிகட்ட தேர்தல் மார்ச் 7-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட்டுகிறது.
இந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், எஐஎம்ஐஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்கியுள்ளன.
இந்நிலையில், தேர்தலையொட்டி உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் பாஜக மூத்த தலைவரும், இந்திய பிரதமருமான நரேந்திரமோடி இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பிரசாத கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
உத்தரபிரதேச மக்கள் குடும்ப அரசியலை விரும்பவில்லை. உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சியமைக்கும். நாட்டின் முன் திடீரென எதிர்பாராத சவால்கள் வரும்போது குடும்ப அரசியல் செய்பவர்கள் அதில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர்.
இந்தியாவின் பாதுகாப்பு படையினரும், பொதுமக்களும் பிரச்சினைகளை சந்திக்கும்போது நிலைமையை மோசமாக்க எதிர்க்கட்சிகள் அனைத்து முயற்சியையும் செய்கின்றன. அதை நாம் கொரோனா காலத்திலும் பார்த்தோம் தற்போது உக்ரைன் விவகாரத்திலும் பார்க்கிறோம். உக்ரைன் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன
குருட்டுத்தனமான எதிர்ப்பு, தொடர்ச்சியான எதிர்ப்பு, கடுமையான விரக்தி, எதிர்மறையான எண்ணங்கள் எதிர்க்கட்சிகளின் அரசியல் சித்தாந்தங்களாக உள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால், ஒட்டுமொத்த உலகமும் ஆச்சரியமடைகிறது. ஆனால், ஏழை மக்கள் மகிழ்ச்சியடைந்ததால் நான் மகிழ்ச்சியடைந்தேன்.
வீட்டில் கழிப்பறை இல்லாத ஏழைத் தாய் படும் கஷ்டம் அரண்மனைகளில் வசிப்பவர்களுக்குத் தெரியாது. சூரிய உதயத்திற்கு முன் இயற்கையின் அழைப்பிற்கு பதிலளிப்பது பற்றி அவர்கள் யோசிக்க வேண்டும் அல்லது நாள் முழுவதும் வலியை தாங்கிக்கொண்டு சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு மட்டுமே செய்ய வேண்டும்’ என்றார்.