மணிப்பூர் 2-ஆம் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவின்போது வன்முறை- ஒருவர் உயிரிழப்பு
மணிப்பூரில் 2- ஆம் மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு 10 மாவட்டங்களில் 22 தொகுதிகளில் நடைபெற்றுவருகிறது.
இம்பால்,
மணிப்பூரில் 2- ஆம் மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு 10 மாவட்டங்களில் 22 தொகுதிகளில் நடைபெற்றுவருகிறது. 11 மணி நிலவரப்படி 28.20 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் நிலையில், கரோங் தொகுதியில் வன்முறை வெடித்துள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்குச்சூட்டில் ஒருவர் பலியானர்.