உத்தரபிரதேச 6ம் கட்ட தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 53.31% வாக்குகள் பதிவு

உத்தரபிரதேச 6-வது கட்ட தேர்தல் மாலை 5 மணி நிலவரப்படி 53.31 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

Update: 2022-03-03 12:19 GMT
லக்னோ,

உத்தரபிரதேசத்தில் 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் 6-வது கட்டமாக நடைபெறும் 10 மாவட்டங்களில் இருந்து 57 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு  இன்று தொடங்கியது. 

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் உத்தரபிரதேச 6-வது கட்ட தேர்தல் மாலை 5 மணி நிலவரப்படி 53.31  சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்