60% இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேறி விட்டனர் - மத்திய அரசு

உக்ரைனில் இருந்து 60% இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேறி விட்டதாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கூறினார்.

Update: 2022-03-01 16:21 GMT

புதுடெல்லி,

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இந்த பணிகளை உக்ரைனில் இருந்து நேரடியாக செய்ய முடியாததால், அங்கு வசிக்கும் இந்தியர்கள் அண்டை நாடுகளுக்கு வெளியேற்றி, அங்கிருந்து விமானம் மூலம் தாய்நாடு அழைத்து வரப்படுகின்றனர்.

ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் நடந்து வரும் இந்த பணிகளை பிரதமர் மோடி தொடர்ந்து கண்காணித்து வருகிறார். மத்திய அரசின் நடவடிக்கையால் உக்ரைனின் அண்டை நாடுகளான போலந்து, ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளில் இருந்து உக்ரைன் வாழ் இந்தியர்களுடன் அடுத்தடுத்து விமானங்கள் இந்தியா வந்து கொண்டிருக்கின்றன.

இந்தநிலையில்,  உக்ரைனில் இருந்து 60% இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேறி விட்டதாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர்  ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கூறியுள்ளார்.  

மீதமுள்ள 40% பேரில், ஏறக்குறைய பாதி பேர் கார்வ்வில் தாக்குதல் பகுதியில் உள்ளதாகவும்  உக்ரைனில் 20,000 இந்தியர்கள் சிக்கி இருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் 12,000 பேர் வெளியேறி விட்டனர் எனவும் உக்ரைனில் இருந்து தப்பிய சுமார் 1,700 இந்தியர்கள் போலந்து நாட்டில் உள்ளனர் என கூறியுள்ளார்.

மேலும் உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்டு வர அடுத்த சில நாட்களில் 26 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாகவும்  இந்திய விமானப்படையின் சி17 ரக விமானம் நாளை காலை 4 மணிக்கு ருமேனியா செல்கிறது என தெரிவித்தார். தொடர்ந்து உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க இந்திய விமானப்படை விமானம் ருமேனியா செல்கிறது. 

மேலும் செய்திகள்