உக்ரைன் விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் உயர் மட்ட ஆலோசனை
உக்ரைன் விவகாரம் தொடர்பாக கடந்த 2 தினங்களில் நடைபெறும் 4-வது கூட்டம் இதுவாகும்.
புதுடெல்லி,
உக்ரைன்- ரஷியா இடையே ஆறாவது நாளாக போர் நடந்து வருகிறது. கார்கீவ், கீவ் போன்ற நகரங்களில் ரஷியா நடத்தி வரும் கடும் தாக்குதலில் இந்திய மாணவர்கள் வெளியேர முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, மாணவர்கள் உள்பட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் கங்கா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், இந்த போர் களத்தில் சிக்கி உக்ரைன் கார்கீவ் நகரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் படித்து வந்த கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்கிற மாணவர் உயிரிழந்துள்ளார் என்ற செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி ஆலோசனை
இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று உயர் மட்ட ஆலோசனை நடைபெற்றுள்ளது. ஆலோசனையில் மூத்த அமைச்சர், அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். கடந்த 2 தினங்களில் நடைபெறும் 4-வது கூட்டம் இதுவாகும். உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.