அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்; தரையோடு தரையாக தவழ்ந்து வெளியேறிய பல்கலைக்கழக பதிவாளர்..!

அவர் தவழ்ந்து மாணவர்களின் கால்களுக்கு இடையே ஊர்ந்து சென்று வெளியேறினார்.

Update: 2022-03-01 09:59 GMT
கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள சாந்திநிகேதனில் அமைந்துள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழக மாணவர்கள், கடந்த திங்கள்கிழமை மதியம் மூடப்பட்ட பல்கலைக்கழக விடுதிகளை திறக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தனது அலுவலகத்தை விட்டு வெளியேற முடியாமல் தவித்தார். அதனை தொடர்ந்து அவர் தவழ்ந்து மாணவர்களின் கால்களுக்கு இடையே ஊர்ந்து சென்று வெளியேறினார்.



இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

மாணவர்கள் பதிவாளரை வெளியேற விடாமல் முற்றுகையிட்டு முழக்கமிட்டதால், அவர் மிகவும் சிரமப்பட்டுள்ளார்; பரிதாபமான நிலைக்கு ஆளாக்கப்பட்டார்.
பல்கலைக்கழக மாணவர்களின் இத்தகைய மோசமான செயலை பல்வேறு தரப்பினரும் கண்டித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்