இந்தியர்களை மீட்கும் பணி: உக்ரைன் விரையும் மத்திய மந்திரிகள்...!
உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு மத்திய மந்திரிகள் 4 பேர் செல்ல உள்ளனர்.
புதுடெல்லி,
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலைத் தொடர்ந்து அங்குள்ள மாணவர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை தாய்நாடு அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
உக்ரைன்- ரஷிய போர் 5-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனில் உள்ள கீவ், கார்கிவ், சுமி நகரங்களில் உள்ள இந்தியர்கள் வெளியே செல்ல வேண்டாம். இந்த சூழலில் வெளியே செல்வது பாதுகாப்பானது அல்ல என இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உக்ரைன் நெருக்கடி குறித்த உயர்மட்டக் குழு கூட்டம் புதுடெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், மத்திய மந்திரிகள் ஹர்தீப் சிக் பூரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜூ, வி.கே.சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் இந்தியர்களை மீட்டெடுக்க அண்டை நாடுகளுக்கு மத்திய மந்திரிகள் செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்த உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு மத்திய மந்திரிகள் செல்ல உள்ளனர்.
* மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா ருமேனியா, மால்டோவா நாடுகளுக்கு செல்ல உள்ளார்.
* மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ ஸ்லோவாக்கியா செல்ல உள்ளார்.
* மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி ஹங்கேரிக்கு செல்ல உள்ளார்.
* மத்திய இணை மந்திரி வி.கே.சிங் போலந்து செல்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு செல்லும் மத்திய மந்திரிகள் இந்தியர்களை மீட்டுக்கும் பணியை நிர்வகிப்பார் என கூறப்படுகிறது.
#RussiaUkraineConflict | Minister Jyotiraditya Scindia will look after Romania and Moldova, Kiren Rijiju will go to Slovakia, Hardeep Singh Puri will go to Hungary and Gen (Retd) VK Singh will be in Poland to manage the evacuation of Indians stuck in Ukraine.
— ANI (@ANI) February 28, 2022