உக்ரைன் விவகாரம்: பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்

உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

Update: 2022-02-28 06:00 GMT
புதுடெல்லி,

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலைத் தொடர்ந்து அங்குள்ள மாணவர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை தாய்நாடு அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
 
உக்ரைன்- ரஷிய போர் 5-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனில் உள்ள கீவ், கார்கிவ், சுமி நகரங்களில் உள்ள இந்தியர்கள் வெளியே செல்ல வேண்டாம். இந்த சூழலில் வெளியே செல்வது பாதுகாப்பானது அல்ல என இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உக்ரைன் நெருக்கடி குறித்த உயர்மட்டக் குழு கூட்டம் புதுடெல்லியில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், மத்திய மந்திரிகள் ஹர்தீப் சிக் பூரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜூ, வி.கே.சிங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

இந்தக் கூட்டத்தில் இந்தியர்களை மீட்டெடுக்க அண்டை நாடுகளுக்கு மத்திய மந்திரிகள் செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

மேலும் செய்திகள்