தேச கட்டமைப்புக்காக பங்காற்றியவர்; மொரார்ஜி தேசாய்க்கு பிரதமர் மோடி அஞ்சலி
தேச கட்டமைப்பில் நினைவுகூரும் வகையில் பங்காற்றியவர் என்ற முறையில் பரவலாக மதிக்கப்படுபவர் என முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தி உள்ளார்.
புதுடெல்லி,
முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நம்முடைய முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர் நம் நாட்டை கட்டமைக்கும் பணியில் நினைவுகூரும் வகையில் பங்காற்றியதற்காக பரவலாக மதிக்கப்படுபவர். இந்தியாவை வளம் நிறைந்த நாடாக ஆக்குவதற்கான விரிவான முயற்சிகளை மேற்கொண்டவர். பொதுவாழ்வில் நன்னெறியை என்றும் வலியுறுத்தியவர் என்று தெரிவித்து உள்ளார்.
I pay homage to our former PM Shri Morarjibhai Desai. He is widely respected for his monumental contribution to nation building. He made extensive efforts to make India more prosperous. He always emphasised on probity in public life.
— Narendra Modi (@narendramodi) February 28, 2022