பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் டுவிட்டர் கணக்கு முடக்கம்
பாஜக தேசியத் தலைவர் டுவிட்டர் கணக்கு ஹேக்கர்களால் சிறிது நேரம் முடக்கப்பட்டது.
புதுடெல்லி,
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் டுவிட்டர் கணக்கு இன்று காலை சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டு முடக்கப்பட்டது. அவரது டுவிட்டர் பதிவில் இருந்து உக்ரைன், ரஷியாவுக்கு கிரிப்டோ கரன்சி மூலம் நிதி உதவி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பதிவுகள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டன.
சற்று நேரத்தில் வெளியான மற்றொரு டுவிட் பதிவில், எனது டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்படவில்லை. அனைத்து நிதி உதவிகளும் உக்ரைன் அரசுக்கு நேரடியாக செல்லும்” எனத்தெரிவிக்கப்பட்டு இருந்தது. நெட்டிசன்களை குழப்பும் வகையில் அடுத்தடுத்து டுவிட் வெளியானது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது.
எனினும், சிறிது நேரத்தில் மீட்கப்பட்ட ஜேபி நட்டாவின் கணக்கு சிறிது நேரத்தில் மீட்கப்பட்டது. ஹேக்கர்களால் பதிவு செய்யப்பட்ட அனைத்து டுவிட்களும் நீக்கப்பட்டன.