உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை விரைவாக மீட்க வேண்டும்: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்
உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை விரைவாக மீட்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுடெல்லி,
உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை விரைந்து மீட்க வேண்டும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: -
உக்ரைனில் இந்திய மாணவர்கள் பதுங்கு குழிகளில் இருக்கும் காணொலிகள் கவலை அளிப்பதாக உள்ளது. ரஷிய படைகள் கடுமையாக தாக்கும் கிழக்கு உக்ரைனில் பல மாணவர்கள் சிக்கியுள்ளனர். எனவே, இந்திய மாணவர்களை விரைவாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
தனது டுவிட் பதிவில், உக்ரைனில் பதுங்கு குழிகளில் தங்கியிருக்கும் கர்நாடக மாநில மாணவிகளின் வீடியோவையும் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.