இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,499-பேருக்கு கொரோனா

கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 881- ஆக உள்ளது.

Update: 2022-02-26 04:14 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு மளமளவென குறைந்து வருகிறது. தொற்று பாதிப்பு வேகமாக  குறைந்து வருவதால் கட்டுப்பாடுகளையும் மாநில அரசுகள் தளர்த்தியுள்ளன. இதனால், மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முழு வீச்சில் தடுப்பூசி போடும் பணியும் நடைபெற்று வருகிறது. 

இந்தியாவில் கடந்த 24 -மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- “ இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,499- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 23,958- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 255- பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுடன்  சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 881- ஆக உள்ளது. தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 1.01- சதவிகிதமாக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 22  லட்சத்து 70 ஆயிரத்து 482 -ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 13 ஆயிரத்து 481- ஆக அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்