உத்தரபிரதேசத்தில் நாளை 5-ம் கட்ட தேர்தல்...!
உத்தரபிரதேசத்தில் 5-ம் கட்ட தோ்தலுக்கான பிரசாரம் நேற்று நிறைவடைந்தது.
லக்னோ,
உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. ஏற்கனவே 4 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. 5-ம் கட்ட தேர்தல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் 12 மாவட்டங்களில் உள்ள 61 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தநிலையில் 5-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று நிறைவடைந்தது.
அமேதி, ரேபரேலி, சுல்தான்பூர், சித்ரகூட், பிரதாப்கர், கவுசாம்பி, பிரயாக்ராஜ், பாரபங்கி, அயோத்தி, பஹ்ரைச், ஷரவஸ்தி மற்றும் கோண்டா ஆகிய மாவட்டங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
அங்கு ஆளும் பா.ஜ.க.வுக்கும், எதிர்தரப்பான சமாஜ்வாடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கும் கடும் போட்டி நிலவுகிறது. பிரசாரத்தின் கடைசி நாளில் பிரியங்காவும், ராகுல்காந்தியும் இணைந்து அமேதி, ரேபரேலியில் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.