சத்தீஷ்கர்: விவசாயத்துக்கு பசுவின் சிறுநீரை பயன்படுத்த செயல்திட்டம் - முதல்-மந்திரி உத்தரவு

சத்தீஷ்காரில் விவசாயத்துக்கு பசுவின் சிறுநீரை பயன்படுத்த செயல்திட்டம் உருவாக்குமாறு அதிகாரிகளுக்கு சத்தீஷ்கார் முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-02-25 18:56 GMT
ராய்ப்பூர்,

சத்தீஷ்காரில் ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிக்கு பதிலாக பசுவின் சிறுநீரை விவசாயத்துக்கு பயன்படுத்த மாநில அரசு திட்டமிட்டு உள்ளது.

இந்த விவகாரத்தில் வேளாண் விஞ்ஞானிகளுடன் ஆலோசனை நடத்தி 2 வாரங்களுக்குள் செயல்திட்டம் உருவாக்குமாறு தலைமை செயலாளருக்கு முதல்-மந்திரி பூபேஷ் பாகேல் உத்தரவிட்டு உள்ளார்.

விவசாயத்துக்கு தொடர்ந்து ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதால் மண்வளம் குறைந்து வருவதுடன், மக்களின் உடல் நலமும் பாதிக்கப்படுவதாக மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

எனவே விவசாயத்தில் நச்சு ரசாயனங்களின் பயன்பாட்டிற்கு பதிலாக பசுவின் சிறுநீரை பயன்படுத்துவதற்கான அபரிமிதமான சாத்தியக்கூறுகள் உள்ளதாவும், சில இடங்களில் இது வெற்றிகரமாக பயன்படுத்தியதற்கான உதாரணங்கள் இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

மேலும் செய்திகள்