தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.267 கோடி நிதி - மத்திய அரசு விடுவிப்பு

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 267 கோடி ரூபாய் நிதியை மத்திய நிதி அமைச்சகம் விடுவித்துள்ளது.

Update: 2022-02-25 12:59 GMT
புதுடெல்லி,

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நேற்றைய தினம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து, தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள உள்ளாட்சிகளுக்கான நிதி, நிவாரண நிதிகள், மத்திய அரசு வசூலிக்கும் வரிகளில் தமிழகத்தின் பங்கு உள்ளிட்டவற்றை இந்த நிதியாண்டிற்குள் மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என வலுயுறுத்தினார்.

இந்த நிலையில் இன்று தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் 267 கோடி ரூபாய் நிதியை விடுவித்துள்ளது. தமிழகம் தவிர ஒரிசா, ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, திரிபுரா ஆகிய 5 மாநிலங்களுக்கும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை மத்திய நிதி அமைச்சகம் விடுவித்துள்ளது. 

மேலும் செய்திகள்